Menaka Mookandi / 2012 மார்ச் 16 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று மதுவரி திணைக்களம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது வெளிநாட்டு சிகரட் மற்றும் போலி பீடி தயாரிப்பு நிலையம் போன்றவற்றை முற்றுகையிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சர் ந.சுசாதரன் தலைமையில் அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியர் எஸ்.தங்கராசா, கல்முனை பொறுப்பதிகாரி நியூட்டன் அவுஸ்கோன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த தேடுதலில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பற்று மற்றும் பாலமுனை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட 4 ஆயிரம் சிகரட்களை
கைப்பற்றியுள்ளதுடன் பீடியில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதான லேபில் சுற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையம் ஒன்றையும் கைப்பற்றியதுடன் அங்கிருந்து 10 ஆயிரம் போலி லேபில் சுற்றப்பட்ட பீடிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சர் ந.சுசாதரன் தெரிவித்தார்.
இதன்போது வெளிநாட்டு சிகரட்டுக்களை கடத்திவந்து விற்பனைசெய்த ஐந்து வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் போலி பீடி லேபில் சுற்றிக்கொண்டிருந்த இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மதுவரித் திணைக்களத்தின் கல்முனை அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
.jpg)
29 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago