2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் உவைஸ் தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைவு

Super User   / 2012 மார்ச் 16 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியாலளர் மாநாட்டின் போது தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாவுல்லாவுடன் இணைந்துகொண்டார்.

இதன்போது, அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.எம்.பஹீஜும் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாவுல்லா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யூ.எல்.உவைஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மஜ்லிஸுல் சுராவின் பிரதி தலைவர், அக்கரைப்பற்று அமைப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று மத்திய குழு தலைவர் ஆகிய பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • ibnuaboo Saturday, 17 March 2012 12:59 AM

    அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசுக்கு உவைஸ் ஒரு ஊக்க மருந்து. மேலும் இது ஒரு புதினமல்ல. அமைச்சர் அதாஉல்ல ,உவைஸ் எல்லோரும் முஸ்லின் காங்கிரஸ் எனும் மரத்தை நாட்டி வளத்தவர்கள். பிரிந்தவர்கள் கூடியுள்ளனர். மீண்டும் பிரியலாம். பின் கூடலாம். இது தமிழக அரசியல் ஸ்டைல்.

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 17 March 2012 03:33 AM

    முஸ்லீம் காங்கிரஸ் போட்ட பிச்சையை மறக்காமல் இருந்தால் சரி. ஆனால் சிரிப்பா இருக்கு என்ன தெரியுமா 1994 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உவைஸ் எத்தனையோ தேர்தல் கேட்டு எதிலும் படு படு படு தோல்வி. இப்ப பெரிய சந்தோசம் எல்லாருக்கும். தொல்லையில் இருந்து மீண்டது முஸ்லீம் காங்கிரஸ்.

    Reply : 0       0

    சேணையுரான் Saturday, 17 March 2012 05:44 PM

    சிறாஜ்,
    1994 ம் ஆண்டின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளராக உவைஸ் கடமை புரிந்தார் என்பதும் அத்தேர்தலில் வெற்றியீட்டினார் என்ற அரசியல் வரலாறும் தெரியாமல் இங்கு கொமான்ட் பன்ன வேண்டாம் . தலைவர் அஸ்ரபின் மறைவின் பின் அதாஉல்லா, உவைஸ், உதுமாலெப்பை ஆகியோர் போராடி பெற்றுக் கொடுத்த மு.கா தலைமை பதவியை தலைவர் மறக்காமல் இருந்தால் சரிதான் ராசா.........

    Reply : 0       0

    ibnuaboo Sunday, 18 March 2012 03:10 AM

    மர்ஹூம் அஸ்ரப் அவர்களுக்கு தெரியும் உவைசின் கனதி, உவைசை மிகவும் நேசித்தார், அஸ்ரப் அவர்கள் இன்றிருந்தால் உவைசும் ஒரு எம்.பி.தான்.

    Reply : 0       0

    rafi Sunday, 18 March 2012 05:31 AM

    யார் எம்பியனாலும்,கட்சியானாலும் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன தான் செய்கிறார்கள் இவர்கள்?

    Reply : 0       0

    vaanmoli Wednesday, 21 March 2012 09:00 PM

    இரண்டு தலையிடி இப்போ, எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்

    Reply : 0       0

    Anonymous Saturday, 24 March 2012 06:52 PM

    ஐயோ தல வலி அப்பா........................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X