2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அமைச்சர் உதுமாலெப்பை அபிவிருத்தி செய்வதாக கூறி மரங்களை வெட்டியுள்ளார்: தவிசாளர் நசீர்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 28 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

'மரம் நடுவோம் நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்பது மஹிந்த சிந்தனையாகும். பயன்தரும் மரங்களை நட்டு அவற்றின் மூலம் பயன்களைப் பெறுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியும் என்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தூரநோக்குடைய சிந்தனையாகும். ஆனால், இன்று அரசாங்கத்திலுள்ள கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை அணைக்கட்டு நிர்மாணிப்பதாகவும் அபிவிருத்தி செய்வதாகவும் கூறிக்கொண்டு ஏழைமக்களின் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை எவ்வித அனுமதியும் பெறாமல் வெட்டிச் சாய்த்துள்ளார். அமைச்சரின் இந்த நடவடிக்கையானது, உண்மையில் மஹிந்த சிந்தனைக்கு எதிரானதாகும். ஒருபுறம் மரங்களை நடுங்கள் என்று ஜனாதிபதி கூறுகின்றார். மறுபுறம் ஜனாதிபதியின் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் முப்பது, நாற்பது வருடங்களாக பயன் தந்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளார்'

இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் கூறினார்.

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தினை அண்டிய பகுதியிலுள்ள பொதுமக்களின் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் எவ்வித அனுமதியும் பெறப்படாமல் வெட்டி வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்களை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் இன்று புதன்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட பொதுமக்களையும் சந்தித்துப் பேசினார்கள். இதன்போதே  தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர்  மேற்கண்டவாறு கூறினார்.

'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின்' கீழ் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றங்கரையோரமாக அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை ஒன்றினை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கொண்டு வருகின்றார்.

இதனைக் காரணமாக வைத்தே, இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் காணி உரிமையாளர்களின் அனுமதி பெறப்படாமல் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மரங்கள் வெட்டப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளரிடம் இவ்விவகாரம் குறித்து முறையிட்டிருந்தனர். குறித்த முறைப்பாடுகளை ஆராயும் வகையிலேயே இன்று பகல் தவிசாளர் தலைமையிலான பிரதேச சபை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்தனர்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'இவ்விவகாரம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம். இதேவேளை, சூழல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவித்துள்ளோம். மரம் ஒன்றினை வெட்டுவது என்றால் அதற்கு சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், ஏழைமக்களின் நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் வெட்டப்பட்டுள்ளபோதும், எந்தவிதமான சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை' என்றார்.

தவிசாளர் ஏ.எல்.எம்.நசீருடன் உபதவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனால், என்.எல்.யாசிர் ஐமன், ஏ.எல்.சுபைதீன் மௌலவி, ஐ.எல்.மனாப் உள்ளிட்ட பலர் வந்தனர்.



  Comments - 0

  • சேணையுரான் Wednesday, 28 March 2012 10:52 PM

    அபிவிருத்தி செய்ய முட்டியதவர்கள் இவ்வாறுதான் கூறுவார்கள்... அமைச்சர் தொடருங்கள் உங்கள் பணியினை...

    Reply : 0       0

    janoovar Wednesday, 28 March 2012 11:24 PM

    தவிசாளர் அவர்களே மூன்று நாட்களாக வெட்டப்பட்ட மரங்களை ஏன் உங்களால் தடுக்க முடியாமல் போயிற்று ...

    Reply : 0       0

    சேணையுரான் Thursday, 29 March 2012 02:40 AM

    தவிசாளர் பார்வையிட்டு சென்றுள்ளார் இனி மக்களுக்கு நஷ்ட ஈடு சென்றடையுமா????

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 02:50 AM

    அமைச்சரை சாட வேண்டாம் அவர் நீர்ப்பாசணத்திற்கு பொறுப்பான அமைச்சர், சட்ட விரோதமாக மூடப்பட்ட ஆற்றங்கரையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இறங்கி உள்ளார்.
    அயல் ஊரில் மதிரெட்டாம் குளம் என்று ஒன்று இருந்தது தற்போது அதன் நிலை?????
    அதனைப் போன்று எமது கோணாவற்றையும் எதிர் காலத்தில் ஆகக்கூடாது என்றுதான் அவர் இப்படி செய்துள்ளார் எனும் போது பாராட்டவேண்டும்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 03:15 AM

    சிறாஜ் என்னும் பெயரில் மேலே கருத்து கூறியிருப்பது ஒரு கோமாளி எனது கருத்து என்று நினைக்கட்டும் என்று இது அமைந்துள்ளது. ஆத்தோரத்தில் உள்ள காரியாலயம் அழகாக வேண்டும் என்பதற்க்காக ஏனைய அப்பாவி மக்களின் தென்னை மரங்களை வெட்டி நாசமாக்கி இருப்பது கேவலமானதும் கண்டிக்கத்துமாகும். இதுக்கும் மக்க்ளிடம் மாத்திரம் அல்ல அவர் மறுமை என்று ஒன்றிருக்கு அங்கும் பதில் சொல்ல வேண்டும். படைத்தவன் பார்த்திட்டு இருக்கான்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 03:17 AM

    படைத்தவனுக்கு பயந்திருந்தால். இது நடந்திருக்காது மக்களின் மீது அன்பிருந்திருந்தால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிய மரத்தை அநியாயமாக வெட்டி இருப்பார்களா?

    Reply : 0       0

    haseen Friday, 30 March 2012 04:04 PM

    நேரத்தோட போட்ட மண்ணை அள்ளி இருந்தா இந்த நிலைமை மீண்டும் வந்திருக்காது. ஆறு 6 ஆக இல்ல அது 5 ஆ போச்சு அமைச்சர் போட்ட மன்னால. இனியும் போட்டா நாலு மூணு எண்டு கடைசியா ௦௦௦ ௦0 ஆகி ?????

    Reply : 0       0

    ooraan Friday, 30 March 2012 09:03 PM

    "பயன்தரும் ஒரு மரத்தை வெட்டுவது ஒரு பிள்ளையை கொலை செய்வதற்கு சமம்" ....

    Reply : 0       0

    sivanathan Sunday, 01 April 2012 04:14 AM

    அமைச்சரே நீங்கள் தொடருங்கள். சட்ட ரீதியற்ற செயல்களைக் கண்ட அச்சம் கொள்ளாதீர்கள்.

    Reply : 0       0

    saleem Addalaichenai Sunday, 01 April 2012 07:24 PM

    # உண்மையாக இவர்களின் நிலத்தில நின்ற மரங்களை வெட்டுவது பிழை. மாறாக ஆற்றங்கரையை மூடுவது இதற்கு சமம்.
    # ஆற்றை மூடி மரத்தை வளர்த்து விட்டு அந்த மரத்தை வெட்டியது பாவம் என்று கூற முடியாது, மாறாக உண்மையாக நமக்கு சொந்தமான நிலத்தில் நின்ற மரங்களை வெட்டினால் நிச்சயம் அல்லாஹ்விடம் தண்டனை உண்டு,

    MY POINT OF VIEW :-
    இந்த நடவடிக்கையின் பின்னர் தவிசாளரின் கருத்து வருமானம் தரும் மரங்களை வெட்டினத்தால் அந்த குடும்பங்களின் வருமானம் பாதிக்கபட்டு உள்ளது என்று கூறுகிறார், நடவடிக்கை எடுக்கும் கதை இல்லை?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X