2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்தின் பங்காளி என்பதற்காக அநியாங்களை தட்டிக்கேட்க முஸ்லிம் காங்கிரஸ் தயங்காது: ஹக்கீம்

Super User   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


"இந்த அரசாங்கத்தின் பங்காளி என்பதற்காக எமது சமூகத்துக்கு எதிராக அநீயாயங்களும் அட்டூழியங்களும் முடுக்கி விடப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அதனை தட்டிக் கேட்க ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தயங்காது. முதுகெலும்புள்ள ஒரு அரசியல் தலைமையினால் இந்த சந்தர்ப்பத்தில் இந்த விடயங்களை பேசாமல் விட்டால் எமக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது" என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலே உரையாற்றும்போதே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

"பல தசாப்தங்களாக தம்புள்ளை மாநகரில் இருந்து வந்த முஸ்லிம் சமூகத்தின் புனித ஸ்தலமான பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி, பௌத்த மதத் தலைமையில் மாற்றுப் பிரதேசங்களிலிருந்த கொண்டு வரப்பட்ட அடிவருடிகளால் அடாவடித்தனங்களை அரங்கேற்றி விட்டு, அறிக்கை விடுகின்ற இந்த நாட்டின் முன்னனி அரசியல் தலைமைகளுக்கும் அரசாங்கத்தின் கபடத்தனத்துக்கும், அசட்டுத்தனத்துக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு போதும் துணைபோகாது.

தம்புள்ளை மாநகரில் புனித பிரதேச பிரகடணம் என்ற போர்வையில் அங்குள்ள சிறுபான்மை மக்களின் பொருளாதாரத்தையும் அவர்களுடைய சொத்துக்களையும் சூரையாடும் ஒரு சூட்சியே இந்த அரங்கேற்றமாகும். இதற்கு பல சாட்சியங்கள் எங்களிடம் உள்ளன. தம்புள்ள மாநகரிலுள்ள முதலாளிமார்கள் விரட்டப்பட்டுள்ளனர் விலை பேசப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்துக்கு துணைபோகும் அரசியல் தலைமையாகவும், அமைச்சராகவும் ஒரு போதும் இருக்க மாட்டேன். இந்த விடயத்தில்  அரசின் எந்தவித மாயாஜாலங்களுக்கும் விட்டுக் கொடுப்புக்களுக்கும் இடம் கொடுக்காது இந்தத் தலைமை உறுதியுடன் நின்று போராடும் என்பதை இந்த அரங்கேற்றத்தின் பின்னணியில் இருந்து பிள்ளையை கிள்ளி தொட்டிலாட்டும் அரசியல் தலைமைகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தை அரசாங்கம் சாதாரண பார்வையில் நோக்குமாயின் அதை அவர்களின் அசட்டுத்தனமாகத்தான் கொள்ள முடியும். இந்த விடயம் சர்வதேசத்தின் பார்வைக்குரிய விடயமாகும் ஜெனீவா மாநாட்டில் ஆதரவு வழங்கிய ஒவ்வொரு நாடும் தனது கழுகுப் பார்வையினால் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதற்கு பதில் கூறியாக வேண்டும்" என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X