2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபையின் அடுத்த அமர்வு தொடர்பான அழைப்பிதழை எதிர்க்கட்சி தலைவருக்கு அனுப்புமாறு உத

Super User   / 2012 மே 07 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று மாநகரசபையின் அடுத்த அமர்வு தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பிதழை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனிக்கு அனுப்பி வைக்குமாறு அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளருக்கு அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் கடிதத் தலைப்பில் 25 ஏப்ரல் 2012ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சபை நடைபெறும் திகதி, நேரம் என்பவற்றை சின்னலெப்பை முகம்மது ஹனீபா உட்பட சகல உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறியத் தருகின்றேன் என அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்நாயக்க குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் கடந்த 20 மார்ச் 2012ஆம் திகதிய அமர்வில் - தான் கலந்துகொண்ட போதும், வரவுப் பதிவேட்டில் கையொப்பமிடுவதற்கு தனக்கு இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான எதிர்க்கட்சித் தலைர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி - எழுத்து மூலமான முறைப்பாடொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

இதேவேளை, மாநகர சபையின் கடந்த அமர்வுக்கான அழைப்பிதழும் ஹனீபா மதனிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கவில்லை. இருந்த போதிலும் - அமர்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த ஹனீபா மதனி – சபைக்குள் நுழைய விடாமல் பொலிஸாரினால் தடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X