2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம்

Super User   / 2012 ஜூலை 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.சி.அன்சார்)


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டதுடன் வேட்பாளர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

அம்பாறை நகரிலுள்ள தயா கமகேயின் ஆடைத்தொழிற்சாலையின் கேட்போர்கூடத்தில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான தயா கமகே தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண தேர்தல் சம்பந்தமாக கட்சி ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை  மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொள்ளவுள்ள பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, அனோமா கமகே, ஹரின் பொர்னார்ந்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X