2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஒலுவில் சிறிய பாலத்தின் கீழ் வான் வீழ்ந்தது: ஒருவர் காயம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஒலுவில் சிறிய பாலத்தீன் கீழ் இன்று காலை வாகனமொன்று வீழ்ந்ததில் - காயமடைந்த சாரதி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வான் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டினை இழந்ததன் காரணமாக, ஒலுவில் சிறிய பாலத்தின் கீழ் வீழ்ந்ததில் வாகன சாரதி கடுமையான காயங்களுக்குள்ளானார்.

விபத்து இடம்பெற்ற வேளை சாரதி தவிர, வாகனத்தில் வேறு எவரும் இருக்கவில்லை எனவும், வாகன உரிமையாளர் அக்கரைப்பற்றினைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகிறது.

இவ் விபத்துத் தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X