2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அம்பாறையில் நேற்று முதல் மின் தடை

Super User   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் முழுவதும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

பதுளையிலுள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்தே கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. எனினும் பதுளையிலுள்ள காட்டு பிரதேசத்திலுள்ள மின் கம்பமொன்றில் ஏற்பட்ட தடங்கல் காரணமாகவே இந்த மின் வெட்டு ஏற்பட்டுள்ளது என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் குறித்த மின் கோளாரினை திருத்துவதற்கு யாருமில்லை என அவர்கள் குறிப்பிட்டனர். இதனை சரி செய்வதற்கு இன்றும் இரண்டு நாட்கள் தேவைப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேபோன்று, கடந்த மாத நடுப்பகுதியில் பதுளையிலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளராறு காரணமாக சுமார் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த மின் வெட்டின் காரணமாக க.பொ.த (உ/த) பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் மற்றும் நோன்பு நோற்கும் முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பதுளையிலுள்ள மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மட்டக்கப்பளப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. எனினும், குறித்த மாவட்டங்களுக்கு லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X