2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேசத்திற்கு மகுடம் நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவின் 'தேசத்திற்கு மகுடம்'  நடமாடும் சேவை தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  பிரதேச செயலாளர் எஸ்.கரண் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.பி.எம்.அசங்க அபயவர்த்தன, நாவிதன்வெளி கோட்ட கல்வி அதிகாரி, மதகுருக்கள், நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், இலங்கை மின்சார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், கல்வி, குடிநீர் விநியோகம், தேசிய வீடமைப்பு அதிகார சபை, போக்குவரத்து, பொலிஸ், பிரதேச சபை, அரச சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்களுடான நடமாடும் சேவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X