2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சுயதொழில் உதவி

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில் பிரதேசங்களில் மிகவும் வறுமை நிலையில் உள்ள  மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்துவதற்கான குடும்பப் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ், தலா ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40,000 ரூபா படி 95 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான உதவிகள்; நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

ஆடு, கோழி வளர்ப்பு, புடவை வியாபாரம், உணவுப் பண்டங்கள் தயாரித்தல், மா, மிளகாய்தூள்; அரைத்தல், விவசாயம் மற்றும் தையல்  தொழில்களுக்கான உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

தாண்டியடி சமூக, பொருளாதார, அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் பொத்துவில் பிராந்திய வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் இந்த உதவிகள்  இவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம்.தௌபீக், வேள்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் இருதயம் மைக்கல், திட்ட இணைப்பாளர் தயாளன் இலட்சுமணன், ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X