2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கல்முனைக் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்,அப்துல் அஸீஸ்)


கல்முனைக் கடற்கரையோரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கல்முனைக் கடற்கரையின் முனைப்பகுதியில் (பழைய ஐஸ்மோல் முன்பாக) இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியதைக் கண்ட மக்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர். அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனைப் பொலிஸார் சடலத்தை இனம் கண்டதன் பின் சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவலை வழங்கினர்.

அங்கு வருகை தந்த சம்மாந்துறை நீதிமன்ற நீதிபதி மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலைக்கு சடலத்தை எடுத்துச் செல்லுமாறு சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

அச்சடலம் காரைதீவு ஆர்.கே.எம்.வீதியில் வசித்து வந்த செல்லத்துரை மும்மூர்த்தி (வயது 54) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்த்தர் ஒருவரின சடலம் என இனங்காணப்பட்டுள்ளது.

நேற்று முதல் இவரைக் காணவில்லையென உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கும் வேளையில்தான் இச்சடலம் கரையோதிங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X