2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அம்பாறை தேர்தல் பிரசார கூட்டங்களில் அமைச்சர்கள், நாமல் பங்கேற்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கிழக்கு மாகாணசபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்  நேற்று திங்கட்கிழமை மாலை தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் கல்முனையில்  நடைபெற்றன

வேட்பாளர் கே.புஸ்பகுமார் (இனியபாரதி), மற்றும்  கல்முனை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் ஆகியோர் தலைமைகளில் நடைபெற்ற மேற்படி பிரசார கூட்டங்களில்,

இளைஞர்களுக்கான நளைய அமைப்பின் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன, சிரேஷ்ட அமைச்சர் பீ. தயாரெட்ன, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் வேட்பாளருமான எஸ்.செல்வராசா, குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்கு பண்டார, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எதிர் வீரவர்த்தன, திலிப் அமுனுகம, முன்னாள் பிதியமைச்சரும் இரத்தினபுரி தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் சந்தன  ஹெட்டியாராச்சி, நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சுலைமாலெவ்வை, கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.எச்.றஹ்மான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0

  • Maattrem Thursday, 23 August 2012 02:35 PM

    பாவம் இந்த மக்கள். எதைத்தருவதாக கூறி இங்கு இவர்களை வரவழைத்தார்களோ. இந்த மக்களின் முகத்தில் தெரியும் கீறல்களைப்பார்த்தால் எப்படியப்பா இவர்களால் வெற்ரிலைக்கு வாக்களிக்க முடியும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X