2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

முஸ்லிம் காங்கிரஸை அழித்துவிட வேண்டுமென்று பேரினவாத சக்திகள் திட்டம்: கல்முனை மாநகர மேயர்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


'முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸை எப்படியும் அழித்து விட வேண்டுமென்று இந்நாட்டு பேரினவாத சக்திகள் திட்டமிட்டுள்ளன. இத்திட்டங்களை முறியடிக்கக் கூடிய சக்தி மக்கள் கைகளில்தான் இருக்கின்றது' என்று கல்முனை மாநகர சபையின் மேயர் சிராஸ் மீராசாகிப் தெரிவித்தார்.

'முஸ்லிம்களின் உரிமைக் குரலாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வது நமது பொறுப்பாகும். இதனைச் செய்வதற்கு நாம் தவறுவோமாயின் வரலாற்றுத் துரோகம் செய்தவர்களாக மாறி விடுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் கேட்போர் மண்டபத்தில் மாதர் அமைப்புக்களுக்கு ரமழான் நோன்புப் பெருநாளைக்கான அன்பளிப்புப் பொருட்களை வழங்கிவைக்கும் வைபவத்தில் உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறுகையில்,

'இப்போது கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முழு உலகத்தினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தேர்தலின் முடிவுகள் எப்படி அமையப் போகின்றன என்று சர்வதேச சமூகங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இத்தேர்தலில் நாம் சரியான முடிவுகளை எடுக்காவிட்டால் இனப்பிரச்சினைக்கான தீர்வில் நாம் கைவிடப்பட்டவர்களாகிப் போய்விடுவோம். ஆதலால், கடந்த மாநகரசபைத் தேர்தலில்; நீங்கள் என்னை முழுமையாக ஆதரித்து வெற்றி பெறச்செய்து மேயராக்கினீர்கள். அதற்கு நான் மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது வெற்றிக்கு எவ்வாறு நீங்கள் உழைத்தீர்களோ, அதே போன்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நமது கட்சி வெற்றி பெற மரச் சின்னத்திற்கு வாக்களித்தல் வேண்டும். எனது தேர்தல் காலத்தில் நான் உங்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். அந்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றேன்.

எம்மோடு இணைந்துள்ள இந்த மாதர் சங்கங்கள் அனைத்தும் தொடர்ந்தும் எம்மோடு இணைந்து இருத்தல் வேண்டும். முஸ்லிம் சமூகத்தினதும், எமது பிரதேசத்தினதும் வளர்ச்சிக்கு ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டும்' என்றார்.

  Comments - 0

  • rima Wednesday, 22 August 2012 06:20 PM

    மேயர் சிராஸ் அவர்கள் நீங்கள் குடுக்கும் நோன்புப் பெருநாளைக்கான அன்பளிப்புப் பொருட்களை அடுத்த கைக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும்.

    Reply : 0       0

    muzarrath Thursday, 23 August 2012 09:19 AM

    ஆஹா! இது தேர்தல் காலமல்லவா? மேயர் சிராஸ்! கெட்டிக்காரர் அப்பா...........

    Reply : 0       0

    அன்வர் Saturday, 25 August 2012 05:26 AM

    பூப்போட்ட சட்டையில நம்மட மேயருக்கு அண்மைக் காலமா ரொம்பப் பிரியம் வந்திருக்கே... என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X