2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கடலில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, ஒலுவில் கடலில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது காணாமல் போன மாணவர் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒலுவில் 2ஆம் பிரிவு பழைய தபாலக வீதியைச் சேர்ந்த அஸ்ரப் இஹ்ஜாஸ் முபாரக் (வயது 19) என்பவரது சடலமே கடற்படையினரால் மீட்கப்பட்டது.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் 4  பேர்  ஒழுவில் வெளிச்சவீட்டுக்கு அருகில் உள்ள கடலில் நேற்று புதன்கிழமை மாலை   குளித்துக்கொண்டிருந்தபோது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதனைக் கண்ட மீனவர்களும் பொதுமக்களும் மீன்பிடிப் படகில் சென்று 3 மாணவர்களை காப்பாற்றினர். இருப்பினும் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

காப்பாற்றப்பட்டவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X