2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த கண்பார்வை குறைந்த குடும்பங்களுக்கு இலவச முக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் சக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின் அழைப்பின் பெயரில் சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இவ்வைபவத்தில் அமைச்சின் அதிகாரிகள், மாநகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா உரையாற்றுகையில்

ஜனாதிபதியின்; விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட வருமானம் குறைந்த சமுர்த்தி நிவாரணம் பெறுகின்றவர்கள் அத்துடன் பொதுசன மாதாந்த உதவி பெறுகின்ற நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 1000 ரூபா தேசிய சேமிப்பு வங்கிகளினூடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எமது ஜனாதிபதி சமுக சேவை அமைச்சிக்கு 911 மில்லியன் ரூபாவினை இவ்வருடம் ஒதுக்கியுள்ளார்.

எதிர்வரும் ஆண்டில் இத்தொகை அதிகரித்து மேலும் பல திட்டங்களை எமது மக்களுக்கு செய்வதற்கான ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தாh.;

இந்நிகழ்வில் 500இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X