2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கிழக்கு தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை ஒரே பிரச்சார மேடையில் அமர்த்த ஏற்பாடு

Super User   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் தத்தமது கட்சிகளின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விளக்கும் பொதுக்கூட்டங்களை எப்.ஜே.பி என்றழைக்கப்படும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெறவுள்ளது என எப்.ஜே.பியின் தலைவர் அஷ்ஷெய்க் எம். நஜா முகம்மட் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, மக்கள் விடுதலை முன்னனி மற்றுமு; நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்  ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதே போன்ற மற்றுமொறு பொதுக்கூட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையிலும் இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.

இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடைமுறையை இல்லாமல் செய்வதுடன் எந்தவொரு கட்சியும் எந்தவொரு வேட்பாளரும் மாகாணத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்ற ஜனநாயக சூழலை ஏற்படுத்தும் நோக்கிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0

  • ராமமூர்த்தி Friday, 24 August 2012 10:25 AM

    வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    IBNU ABOO Friday, 24 August 2012 04:26 PM

    இனி மேடையில் பொதுமக்களுக்கு நல்ல குஸ்தி சண்டைக்காட்சிகள் காணும் வாய்ப்பு கிடைக்கபோகிறது.

    Reply : 0       0

    Ahamed Saturday, 25 August 2012 07:35 PM

    மக்கள் உண்மையை அறிய நல்ல வாய்ப்பு.........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X