2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சம்புநகரின் யானைகளின் அட்டகாசத்தால் மக்கள் கவலை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

அட்டாளைச்சேனை சம்புநகர் பிரதேசத்தில் யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதுடன் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

சம்புநகர் பிரதேசத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உட்புகுந்த சில யானைகள் அங்குள்ள தென்னை மரத்தோட்டங்களை சேதப்படுத்தியதுடன், குடியிருப்பாளர்களையும் தாக்கமுற்பட்டுள்ளன.

சில நாற்களாக இப்பிரதேசத்தில் யானைகள் உட்புகுந்து அட்டகாசப்படுத்தும் நிலை அதிகரித்துள்ளதனால் இங்குவாழ் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X