2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல் கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அரச நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளினூடாக பிரதேச மட்டத்தில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் 'சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல்' எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்று 'ற்றூ விஷன்' ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

'ற்றூ விஷன்' அமைப்பின் தலைவர் ஏ.சி.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சுகாரதார வைத்திய அதிகாரி பறூஸா நக்பர் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

'அண்மைக்காலமாக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. எனவே சமூக சேவை அமைப்புகளின் உதவியினை பெறுவதனூடாக பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையினை 'ற்றூ விஷன்' எடுக்கவுள்ளது.

இதற்காக, பிரதேசத்திலுள்ள சமூக சேவை அமைப்புகள், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் போன்றவற்றின் உதவிகளை பெறுவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்' என்று 'ற்றூ விஷன்' அமைப்பின் தலைவர் ஏ.சி. உவைஸ் இதன்போது தெரிவித்தார்.

இக்கருத்தரங்கின் போது, சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச மட்டத்தில் 30 பேரைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டது.

நிகழ்வில், சிறுவர்களின் உரிமைகளை மையப்படுத்திய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேற்படி கருத்தரங்கில், சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூக சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X