2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

எங்களுக்கு நடக்கும் அநியாயத்தை பேசினால் அது இனவாதமா?: ரவூப் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


எங்களுக்கு நடக்கும் அநியாயத்தை பேசினால் அது இனவாதமா? இதுவரை நிர்வாக ரீதியாக நடக்கின்ற எத்தனையோ அநியாயங்களை பட்டியல் போட்டுப் பேசலாம்.  ஆனால் இதில் ஒரு பேரினவாதம் அடுத்த பேரினவாதத்திற்கு குறைவில்லாமல் ஏட்டிக்கு போட்டியாக உள்ளது என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் கே.எம்.ஏ.ஜவாத்தை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம்; கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா தலைமையில் கல்முனை கடற்கரைவீதியில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

'முந்தியெல்லாம் அசாமாளியமான நிலவரங்களில், பாதுகாப்புக் கெடுபிடிகள் கூடுதலாக இருந்தபோது தேர்தல் நடைபெற்றது. ஆனால் இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் நடக்க இடம்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் ஓர் ஆப்பிழுத்த குரங்காக மாறியுள்ளது.  ஏன்டா இவர்களை வெளியேவிட்டோம் என்று கைசேதப்படும் நிலையில் அரசாங்கம் இப்போது இருக்கின்றது

வேறு விடயம் ஒன்றும் இல்லாமல்  இன்று முஸ்லிம் காங்கிரஸ் இனவாதம் பேசுவதாக அரசாங்கத்தினர் பேசுகிறார்கள். எது இனவாதம்? எங்களுக்கு நடக்கும் அநியாயத்தை பேசினால் அது இனவாதமா? இதுவரை நிர்வாக ரீதியாக நடக்கின்ற எத்தனையோ அநியாயங்களை பட்டியல் போட்டுப் பேசலாம்.  ஆனால் இதில் ஒரு பேரினவாதம் அடுத்த பேரினவாதத்திற்கு குறைவில்லாமல் ஏட்டிக்கு போட்டியாக உள்ளது.

இந்த சமூகத்தை ஏளனப்படுத்துகின்ற இதை கொச்சைப்படுத்துகின்ற எத்தனையோ விடயங்களை செய்துவருகின்றனர். இவை எல்லாத்திற்கும் பரிகாரம் தேடுகின்ற ஒரு காரணமாகத்தான் இந்த தேர்தலை நாம் பார்க்க வேண்டும்' என்றார்.



  Comments - 0

  • meenavan Sunday, 26 August 2012 11:37 AM

    உங்களுக்கு கட்சிக்கு அம்பாறை மாவட்டத்தில் 6 பேரை போட்டியிட அனுமத்தித்திருந்தால்,உங்களுக்கு என்பதை விட முஸ்லிம்களுக்கு நடக்கும்,நடந்து கொண்டிருக்கும் அநியாயங்கள் பற்றி வாய் திறந்து பேசியிருப்பீர்களா?

    Reply : 0       0

    sainthamaruthu mahan Monday, 27 August 2012 01:20 AM

    கௌரவ தலைவர் அவர்களே! மரம் வெல்லுவது சத்தியம். கட்சிக்கு 05 உறுப்பினர்களை நாம் பெற்றுக் கொள்ள தற்போதுள்ள களநிலவரம் உள்ளது. தேர்லில் பின்னர் நிங்கள் அரசாங்கத்திற்கு ஆட்சயமைக்க முட்டு கொடுக்க முன்வருவீர்களாயின் அது சமூகத்திற்கு நிங்கள் செய்யும் பாரிய துரோகமாகும்.. அத்துடன் வடமத்திய மற்றும் சப்பரகமுவ மாகாணத்தில் எமது கட்சி வெற்றிலையில் போட்டி போட தீர்மாணித்து விட்டு கிழக்கு மாகாணத்தில் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்வாகை ஏற்பட்ட பின்னர் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்க உள்ளது என்பதைதான் மக்களும் சமூகமும் பார்த்துக் கொண்டுள்ளது.
    சாய்ந்தமருது மகன் உதுமான்.

    Reply : 0       0

    aroosh Monday, 27 August 2012 03:13 AM

    நல்லா சொன்னார்.

    Reply : 0       0

    AHAMED JUNAID Monday, 27 August 2012 03:12 PM

    பாம்பின் வாய்க்குள் அகப்படும் தவளை கத்துகிற்தே அது இனவாதத்திற்காகவா கத்துகிற்து ?????தனது உயிரைப் பாதுகாக்க கத்துகிறது;;;;.அது போன்றுதான் முஸ்லிம் தலைவர்கள் சிலரும் பேசிக்கொண்டிக்கிறார்கள் என்பதை இனவாதம் என்று கூறுபவர்கள் உண்ர்ந்து கொண்டால் எதிர் கருத்துக்கள் குறையும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X