2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேர்தல் தொடர்பாக எடுத்துள்ள முடிவினால் அரசாங்கம் தடுமாறிப் போயுள்ளது: ரவூப் ஹக்கீம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

'நாங்கள் இத்தேர்தல் தொடர்பாக எடுத்துள்ள முடிவினால் அரசாங்கம் தடுமாறிப் போயுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் எமது கட்சியின் வெற்றியினைத் தடுப்பதற்கான முயற்சிகள் பல்வேறு கோணங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதான வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்; போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கிழக்குத் தேர்தலுக்குப்  பிறகு முஸ்லிம் காங்கிரஸ் அதனுடைய செல்வாக்கினை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும், அதனோடு இணைந்துள்ள சக்திகளுக்கும் காட்டுவதற்கான சந்தர்ப்பம் இன்று முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இனவாதம் பேசி வாக்கு கேட்பதாக ஒரு பசாதையினை முஸ்லிம் அமைச்சர்கள், அரசின் தலைமைக்கு அவிழ்த்து விட்டுள்ளனர். ஆனால் நான் ஒரு போதும் இனவாதம் பேசவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு நடக்கும் அநியாயங்களைப் பற்றிதான் பேசுகிறோம். பேசுவதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது. அதனைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்களினால் அமைச்சு எனும் பதவியில்லாமல்; அரசியல் செய்ய முடியாது. ஆனால் முஸ்லிம் காங்ரஸினால் அமைச்சுப் பதவிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியும். அதனை செய்தும் காட்டியுள்ளது.
கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் வெல்வதானது கிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல.

வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களை பாதுகாப்பதற்பதற்கான அவர்கள் சந்திக்கின்ற சவால்களுக்கான அவர்களின் விமோசனத்திற்கான ஒரே மார்க்கம் கிழக்கிலே முஸ்லிம் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பதுதான். இதுவே வடக்கு கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரார்த்தனையாகும்.

எனவே இத்தேர்தலில் அனைத்து முஸ்லிம்களும் ஒரணியில் இணைந்து ஒட்டுமொத்த வாக்குகளையும் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திற்கு வழங்கி எமது இருப்பினைப் பாதுகாக்க வேண்டும்.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத் தேர்தலை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடிவையும், அடுத்த தலைமுறையின் தலை விதியையும் தீர்மானிக்கின்ற தேர்தலாக முஸ்லிம்கள் நுணுக்கமாக பார்க்க வேண்டும் 

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்எம்.ஹரீஸ், வேட்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பெருந்திரளான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • ACM Wednesday, 29 August 2012 10:03 AM

    ஊடகவியலாளா் எம்.சி.அன்சார் அவா்களே , நீங்கள் போட்டோ எடுப்பதற்கு கொஞ்சம் பயிற்சி எடுப்பது நல்லது

    Reply : 0       0

    MUHAMMAD Wednesday, 29 August 2012 03:44 PM

    நீங்கள் பேசுங்கள் பேசவேன்டிய இடம் எது என்பதை இன்னும் நீங்கள் விளங்காததுதான் வேதனைக்குரிய விடயம்? மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களுடைய பாசறை என்றெல்லாம் பேசுவீர்ககள். அதை கொஞ்சம் இப்பவாவது புரட்டிப்பாருங்க.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X