2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

தேசத்துக்கு மகுடத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை

Super User   / 2012 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலக  பிரிவுக்கு உட்பட்ட  பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்குடனான நடமாடும் சேவை நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளிக்குடியிருப்பு அல் - பாயிஷாமகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் காணி, பிறப்பு, இறப்பு, திருமண பதிவுகள், பொலிஸ் திணைக்கள சேவைகள்;, சமுர்த்தி மற்றும் சமூக சேவை திணைக்கள சேவை, தபால் திணைக்களத்தின் சேவைகள் இடம்பெற்றன.

இந்நடமாடும் சேவையில் சுமார் 200க்கு மேற்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் சலீம் தெரிவித்தார்.



  Comments - 0

  • apimaani Thursday, 30 August 2012 09:57 AM

    நல்ல விசயம் ஒன்றுக்கு நன்றி

    Reply : 0       0

    rilwan Saturday, 01 September 2012 09:52 AM

    தேர்தல் காலம் வந்தால்தான் இந்த சேவைகள் எல்லாம்... தேர்தல் முடிந்தால் மக்களை மறந்து விடுவார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X