2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கான விளக்கமளிக்கும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ், ஏ.ஜே.எம்.ஹனிபா)

'திவிநெகும' ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி தினணக்களம் தொடர்பாக சமூர்த்தி அதிகாரசபை உத்தியோகத்தருக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று சம்மாந்துறை எம்.ஐ.அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள சமூர்த்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களான சமூர்த்தி முகாமையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்காக நடத்தப்பட்ட இக்கருத்தரங்கிள் ஐந்து அரச நிறுவணங்களை ஒன்றினைத்து அமைக்கப்படவுள்ள திவிநெகும ஒன்றிணைந்த கிராம அபிவிருத்தி திணைக்களம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.

அம்பாரை மாவட்ட சமூர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூர்த்தி அதிகாரசபையின் வங்கி, நிதி மற்றும் மகாசங்க பணிப்பாளர் சந்திர திலக உட்பட சமூர்த்தி அதிகாரசபையின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.



  Comments - 0

  • ismath Thursday, 30 August 2012 12:20 PM

    நல்ல திட்டம்தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X