2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை மேயரினால் இரு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபினால் இரு வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இன்று புதன்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மருதமுனை பிரஞ்ச் சிட்டி வீட்டுத்திட்ட வீதியினை 6,848,751 ரூபா செலவில் கொங்றீட் வீதியாக அமைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கான அடிக்கல்லினை மாநகர மேயர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், ஏ.எல்.எம்.முஸ்தபா மற்றும் எம்.எஸ்.உமர் அலி ஆகியோர் ஆரம்பித்துவைத்தனர்.

மற்றுமொரு நிகழ்வாக சாய்ந்தமருதில் 6,312,052 ரூபா செலவில் கடற்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்டீன், மாநாகர சபை பொறியியலாளர் ஹலீம் ஜெளசி மற்றும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0

  • kulathooran Wednesday, 05 September 2012 02:07 PM

    பல மில்லியன் செலவிலான இரு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் உங்களால் ஏன் கல்முனை மாநகரின் தென் எல்லை கேட் வே இக்கு மை பூசி அலங்கரிக்க முடியாதுள்ளது ஏன்? முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மணிக்கூடு கோபுர மணிக்கூடுகள் இயங்கமை போன்று கேட் வே யையும் கைவிட்டு விட்டீர்களா.....?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X