2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யானை தாக்கியதில் இளைஞன் பலி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பாமாங்கை வயல் பிரதேசத்தில் யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர்   உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை  இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று கண்ணகி வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய யோகராசா உதயராஜ் என்பவரே யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பின் உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு உயிரிழந்தவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பாக ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்து

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X