2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சாய்ந்தமருது பிரதேச செயலக ஏற்பாட்டில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸீஸ்)

2013 தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகம் இன்று கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடமாடும் சேவையினை ஒழுங்கு செய்திருந்தது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த சில்வா பிரதம அதிதியாகவும், மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன, கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா மற்றும் கல்முனை பௌத்த விகாரையின் விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்தின தேரோ ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்த நடமாடும் சேவை தொடர்ந்தும் மாலை 4 மணிவரை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகம் உட்பட 80 திணைக்கள அதிகாரிகளும் உத்தியோஸ்தர்களும் பிரசன்னயமாகியிருந்த இந்த நடமாடும் சேவையின் போது பொதுமக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் காணப்பட்டதுடன் வலது குறைந்தோருக்கு முச்சக்கர நாற்காலிகளும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு உபகார நிதியும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தப்பது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X