2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சமூக நல்லாட்சி ஊடான உட்கட்டுமான வேலைத்திட்டம் தொடர்பிலான செயலமர்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

 'சமூக நல்லாட்சி ஊடான உட்கட்டுமான வேலைத்திட்டம்' தொடர்பில் விளக்கமழிக்கும் செயலமர்வு திருகோணமலை உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

பாம் பவுண்டேசன் நிறுவனம் ஐரோhப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் அம்பாரை மாவட்டத்தில் 'சமூக நல்லாட்சி ஊடான உட்கட்டுமான வேலைத்திட்டம்'  எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி மற்றங்களுடன் பல லேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், அம்பாரை - நாவிதன்வெளி பிரதேச சபையினூடாக மேற்படி அமைப்பு இச்செயலர்வை ஒழுங்கு செய்திருந்தது.

இச்செயலமர்வில், கிழக்கு மாகாண உள்ளூராட்;சி ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்கு மாகாண உள்ளூராட்;சி திணைக்களத்தின் பொறியலாளர் திருமதி எல்.சித்திராதேவி, நாவிதன் வெளி பிரதேச சபையின் செயலாளர் ம.ராமக்குட்டி, பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் சி.பாஸ்கரன், ஐரோhப்பிய ஒன்றியத்தின் பிரந்திய பொறியிலாளர் அசோக்கா அஜந்த உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது பாம் பவுண்டேசன் நிறுவனத்தினால் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பிலும்; கலந்துரையாடப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X