2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 28 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை, பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் உள்ள 30 வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண தேர்தலின் போது தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தனிடம் பொத்துவில்பிரதேச இளைஞர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க,  பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் அனுசரணையுடன் புலம்பெயர் வாழ் மக்களின் நிதியுதவியில் இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், கிழக்கு மாகண சபையின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் இரா.துரைரெட்ணம், பாடசாலை அதிபர் உதயகுமார், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், மற்றும் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளர் செலஸ்ரின் அலஸ்ரோல் ஹென்ரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X