2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சுகாதாரக்கழக உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பாசறை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


அம்பாறை, கல்முனை வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் சுகாதாரக்கழக உறுப்பினர்களுக்கான மூன்று நாள் சுகாதார கழக வதிவிட பயிற்சி பாசறை நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் ஆரம்பமான இப்பயிற்சிப் பாசறை இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றது.

கல்முனை வலய உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பாசறையில் அக்கரைப்பற்று – கல்முனை மாவட்ட உதவி சாரண ஆணையாளர்களான எம்.ஐ.எம்.முஸ்தபா, கே.எம்.தமீம், சாய்ந்தமருது கோட்டக் கல்வி அலுவலக செயற்றிட்ட உத்தியோகஸ்தர் ஏ.றாசிக், சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் ரீ.கே.எம்.சிராஜ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்

இச்சுகாதார கழக மாணவர் பாசறையில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 30 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X