2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அட்டாளைச்சேனையில் நன்றி கூறும் பெருவிழா!

Super User   / 2012 செப்டெம்பர் 30 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


'வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி கூறும் பெருவிழா' எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் விழாவொன்று இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபைக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஏ.எல்.எம். நஸீரின் வெற்றிக்காக தேர்தலில் உழைத்தவர்களுக்கு நன்றி கூறும் பெருவிழாவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு தலைவர் யூ.எல். வாஹிட் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபைக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து மு.காங்கிரஸ் சார்பாக தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான மாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல். தவம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
 
இதன்போது, கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் மு.கா. காங்கிரஸ் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றியும், அதற்கான காரணங்கள் குறித்தும் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.எம். ஜவாத், மு.காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் மஜீத்,  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், பொத்துவில் பிரதேச சபை  தவிசாளர் எம்.எஸ்.வாஸித், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.ஏ. அன்சில்,மு.காங்கிரசின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.





  Comments - 0

  • kiyas Sunday, 30 September 2012 11:20 AM

    உங்கள் வெற்றி தொடரட்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X