2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


அம்பாறை மாவட்டத்திலுள்ள 605 பட்டதாரிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கலந்து கொண்டார்.

சம்மாந்துறை, அக்கரைப்பற்று, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம் மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்களில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு இந்நியமனக் கடிதங்கள் இவ்வைபவத்தில் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், பிரதேச செயலாளர்கள் மற்றும் பட்டதாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







  Comments - 0

  • Romio Saturday, 20 October 2012 03:03 AM

    இன்னொருவரின் நியமனத்தை பறித்துக் கொடுக்கும் அரசியல்... தகுதிகெட்ட சில பசைவாளிபிடித்த பட்டதாரிகள்...

    ஐயோ! ஐயோ! முடியலைப்பா...

    Reply : 0       0

    rima Saturday, 20 October 2012 05:19 PM

    எமது முஸ்லிம் அமைச்சர்களின் அரசியல் நாடகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X