2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கோளாவில் விநாயகர் மகா வித்தியாலய கணினி கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கணினி கூடமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்வியமைச்சின் 22 லட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மேற்படி கணினிக் கூடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

வித்தியாலயத்தின் அதிபர் வி.கிருஷ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கணினிக் கூடத்துக்கான ஆரம்பக் கல்லினை நட்டுவைத்தார்.

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் செயலாளர் ரி.ஜெயாகர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X