2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை மாநகரினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Super User   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


ஐக்கிய நாடுகள் சபையின் 67ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகரத்தினை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிபினால் இன்று புதன்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கல்முனை நகரத்திலுள்ள குப்பை கூளங்களை அகற்றல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக யுனெப்ஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கல்முனை நகரினை அழகு மிக்க நகராமாக பேணும் பொருட்டு கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் 4 கழிவு சேகரிக்கும் தொட்டிகளும் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் 2 கழிவு சேகரிக்கும் தொட்டிகளும் நிறுவப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமரலி,  யுனப்ஸ் நிறுவனத்தின் ஆழுமை விருத்திக்கான தொழிற்பாட்டு முகாமையாளர் அனா செக்கமென்டோ, யுனப்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், மாநகர சபை ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0

  • rima Wednesday, 24 October 2012 09:47 AM

    ஊத்த வாளி தூக்க வாரமாட்டார்களா...???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X