2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான் )


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் தினம் நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கடந்த 1995, ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரபின் முயற்சியினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின்; ஆட்சிக்காலத்தில் இப் பல்கலைக்கழகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல்லைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட இத்தினத்தை ஞாபகப்;படுத்துமுகமாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 23ஆம் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மரக்கன்றுகளும் நடப்பட்டதுடன் விஷேட துவாப்பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில் கலந்து கொண்டதோடு பிரதம பேச்சாளராக மொழித்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X