2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

நற்பிட்டிமுனை நகுலேஸ்வரர் ஆலய அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் மூலம் மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்யும் வகையில் நற்பிட்டிமுனை ஸ்ரீ நகுலேஸ்வரர் கோயில் ஆலய புனர்நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து – மேற்படி கோவில் புனரமைப்புக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த கோயில் புனருத்தாபன நடவடிக்கைகளுக்காக – முதற் கட்டமாக 05 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, சிவஸ்ரீ. க.ஐ.யோகராசா குருக்கள், சிவஸ்ரீ. வ.கு.யோகராசா குருக்கள், கல்முனை கலாசார உத்தியோகத்தர் ரகுலநாயகி, அதிபர் எஸ். சபாரட்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X