2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டம் முழுவதும் மின் தடை

Super User   / 2012 நவம்பர் 04 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டம் முழுவதும் நேற்று சனிக்கிழமை இரவு 6.30மணியிலிருந்து தற்போது வரை மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

பதுளையில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கான மின்சாரத்தை விநியோகிக்கும் அதிவலு கொண்ட மின்சார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளhறின் காரணமாகவே மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது என கல்முனை பிராந்திய மின்சார சபை அலுவலகம் தெரிவித்தது.

பதுளை – பசறை ஆகிய பகுதியிலுள்ள மின் பிரபாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த மின் விநியாகம் தடைப்பட்டுள்ளது எனவும் இந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் திருத்த பணிகள் தற்போது இடம்பெற்று கொண்டிருப்பதாக தெரிவித்த கல்முனை பிராந்திய மின்சார சபை அலுவலகம், எப்போது மின்சாரம் வழங்கப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையினால் மக்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன் அன்றாட நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னரும் பதுளையில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கான மின்சாரத்தை விநியோகிக்கும் அதிவலு கொண்ட மின்சார கட்டமைப்பில் இது போன்ற மின் தடை ஏற்பட்டு சுமார் இரண்டு நாட்கள் தொடர்சியாக அம்பாறை மாவட்டம் முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Mohamed Sunday, 04 November 2012 12:44 PM

    பழகி போச்சு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X