2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2012 நவம்பர் 06 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மேயர் செயலகத்தில் இடம்பெற்றது.

கொரிய நாட்டின் நகர முகாமைத்துவ சபையின் ஆலோசகரும் சுன்கியுல் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் கியோங்சு லிம்மிற்கும் கல்முனை மேயர் சிராஸிற்கும் இடையிலான சந்திப்பின் போNது இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.வலீதின், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜெ.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பேராசிரியர் கியோங்சு லிம்மிடம் கல்முனை மாநகர சபையினால் தயாரிக்கப்பட்ட நகர அபிவிருத்தி திட்டத்தின் இருவட்டினை மேயர் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X