2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு கோரிக்கை பத்திரம் அனுப்பல்

Super User   / 2012 நவம்பர் 07 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினை முறையற்ற ரீதியில் தன்னிச்சையாக புனருத்தாபனம் செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளையும் உடனடியாக நிறுத்துமாறு அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலய அதிபருக்கு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தவறும் பட்சத்தில் இந்த முயற்சிகளை தடை செய்யும் பொருட்டு வழக்கொன்றினை தாக்கல் செய்ய வேண்டியேற்படும் எனவும் கோரிக்கை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபராகவும், பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவராகவும் செயற்பட்டுவரும் வி.ரி.எம். ஹனீபாவுக்கு முகவரியிட்டு, சட்டத்தரணி கே. சமீம் மேற்படி அறிவித்தல் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

இந்தக் கடிதத்திலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முழு விபரமும் வருமாறுளூ

"எனது கட்சிக்காரர்களாகிய அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஏ.சீ. நஜீப், உப செயலாளர் எம்.ஏ.எம். பௌஸ் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த கோரிக்கைக் கடிதம் அனுப்பப்படுகின்றது.

தங்கள் தலைமையில் இதுவரைக்கும் செயற்பட்டு வரும் - மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழுவினைக் கூட்டி இந்த சங்கத்தினை புனரமைப்பு செய்வது சம்பந்தமான எதுவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், தன்னிச்சையான முடிவொன்றினை எடுத்து, சங்கத்தினை புனரமைப்பதற்கும் புதிய அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகளை செய்து - இதற்கான பகிரங்க விளம்பரங்களையும் செய்துள்ளதாக எனது கட்சிக்காரர்கள் எனக்கு அறிவித்துள்ளனர்.

எனவே, முறையற்ற விதத்தில் பழைய மாணவர் சங்க புனருத்தாபனம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் உடன் நிறுத்துவதுடன், பழைய மாணவர் சங்கம் தொடர்பில் ஏதாவது நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பினால் வழமையான நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

தவறும் பட்சத்தில், அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கத்தின் புனருத்தாபனம் என்ற பெயரில் முறையற்ற வகையில் தன்னிச்சையாக உங்களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை தடைசெய்யும் பொருட்டு வழக்கொன்றினைத் தொடருமாறும் நான் அறிவுறுத்தப்பட்டுள்ளேன்".

  Comments - 0

  • Hassan Basit Friday, 09 November 2012 12:45 AM

    இந்த அதிபர் அனுப்பப்பட வேண்டியவரே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X