2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யானைகளின் அட்டகாசம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில்

Super User   / 2012 நவம்பர் 07 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தில் அண்மை காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் மனித உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அட்டாளைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட ஆளம்குளம மற்றும் கரடிக்குளம் ஆகிய பிரதேசங்களுக்குள் இன்று நள்ளிரவு நுழைந்த காட்டு யானைகள் அப்பிரதேசத்தில் வசித்து வரும் குடும்பங்களின் குடியிருப்புக்கள் மற்றும் தோட்டங்களை பலத்த சேதத்துக்கு உட்படுத்தியுள்ளது.

இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறி அயல் பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்தும்  காட்டு யானைகள் காடுகளில் இருந்து இரவு வேளைகளில் மக்களின் குடியிருப்பு நிலங்களை நோக்கி வருவதனால் தீகவாபி, ஆலிம்சேனை ஆலிம் நகர், சம்புநகர், மீலாத் நகர், போன்ற பிரதேச மக்கள் இரவு நேரங்களில் அச்சத்துடயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த காட்டு யானைகளின் அட்டாகாசத்திலிருந்து பாதுகாப்பு வழுங்குமாறும் பிரதேச மக்கள் தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X