2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிதியில் வெளிப்படைத் தன்மை இல்லாமையால் பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் இராஜினாமா

Super User   / 2012 நவம்பர் 22 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழு செயலாளர் பதவியிருந்து டாக்டர் ஐ.எம். ஜவாஹிர் இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் - அரச சுற்றறிக்கைக்கு முரணாக நிதிச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையினாலும் குறித்த பாடசாலையின் பண வரவுகள் உரிய முறையில் கையாளப் படாமையினாலும், பாடசாலை அபிவிருத்திக் குழுவினரின் கருத்துக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் நேர் மாறாக அதிபர் செயற்பட்டு வருகின்றமையினாலுமே இவ்வாறான முடிவொன்றுக்கு – தான் தள்ளப்பட்டுள்ளதாக தனது இராஜினாமா கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் செயலாளர் டாக்டர் ஐ.எம். ஜவாஹிர் அண்மையில் தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த கடிதத்தில் தான் இராஜினாமாச் செய்வதற்கான காரணங்களையும் அவர் விளக்கியிருந்தார். அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறுளூ
 
அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக்குழு செயலாளராக இந்த ஆண்டு ஏப்ரல் 05ஆம் திகதியிலிருந்து செயற்பட்டு வந்துள்ளேன். குறிப்பிட்ட கால பகுதியினுள் இந்த அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் எனக்கு போதியளவு திருப்தியை அளிக்கவில்லை.

அபிவிருத்திக் குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒத்துழைப்புக் கிடைத்த போதிலும், அதிபரின் ஒத்துழைப்பு பூச்சியமாகவே இருந்தன. பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் மற்றும் நிதிச் செயற்பாடுகளில் அரச சுற்றறிக்கையினைப் பின்பற்றியே ஆக வெண்டும் என்று அபிவிருத்திக் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

எனினும் அதிபரின் கருத்துக்களும் நடவடிக்கைகளும் நேர்மாற்றமாகவே காணப்பட்டன. பொறுப்பு வாய்ந்த பதவியிலிருந்கும் இவர் - கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகளையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் கூட்டமொன்றில் தாறுமாறாய்  விமர்சித்தமையும் சுற்றறிக்கைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை என பகிரங்கமாக தெரிவித்தமையும் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாடசாலையின் நிதி விடயங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. சகல பண வரவுகளும் அபிவிருத்திக் குழுவின் கணக்கிலேயே வைப்பிலிடப்பட வேண்டும் என்பது விதியாக இருந்தும் பாடசாலை சிற்றுண்டிச்சாலை மூலம் பெறப்படும் வாடகை பணத்தில் ஒரு ரூபாய் கூட இதுவரைக்கும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் கணக்கில் வைப்புச் செய்யப்படவில்லை.


பாடசாலை அபிவிருத்தி குழுவின் அனுமதியைப் பெற்றுக் கொள்ளாமலேயே பெருந் தொகையான பணம் அபிவிருத்திக் குழுவின் வங்கிக் கணக்கிலிருந்து மீளப்பெறப்பட்டிருக்கின்றது.

பாடசாலை அபிவிருத்திக் குழுவானது எந்தளவு ஆற்றலுள்ளதாக இருப்பினும், அதிபரே அதன் தலைவராய் இருப்பதால் திறமையற்ற – மந்தமான போக்குள்ள அதிபர் அமையப் பெற்ற பாடசாலை அபிவிருத்திக் குழுவால் எதையுமே சாதிக்க முடியாது.

இதற்கு அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழுவானது சிறந்ததோர் உதாரணமாகும். இது ஒரு தேசிய பாடசாiலையாகும். ஆனால், இந்தப் பாடசாலையின் சூழல் மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது.

இந்நிலையானது, கற்றலுக்கும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாய் உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் துணைநிலைக் கல்வி நிலைமை கீழ் மட்டத்தில் உள்ளது.

இந்தப் பாடசாலையின் வயது 100 வருடங்களைத் தாண்டி விட்டதென்பதால் நூற்றாண்டு விழா கொண்டாடி விட முடியாது. அதற்குரிய கண்முன்னான அந்தஸ்து காணப்பட வேண்டும். அழுக்கை பொன்னாடையால் போர்த்தி வைக்க முடியாது.

இந்தப் பாடசாலை சமூகத்தினை மிக மோசமான நிலையிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியினை ஏற்றுக்கொண்டு எனக்கு வழங்கப்பட்ட பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் பதவியிலிருந்தும் பொறுப்புகளில் இருந்தும் முற்றாக இராஜினாமா செய்கிறேன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் பிரதிகள், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றம் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  Comments - 0

  • meenavan Friday, 23 November 2012 11:40 AM

    அதிபர் அரச சுற்றறிக்கையை அப்படியே பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறினாரா? அப்படியென்றால் அதன் பின்புலம் அரசியல் பின்னணி இருக்கலாம் அல்லது மாகாண மட்டத்தில் உயர் பதவி வகித்த அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் செல்வாக்கு இருக்கும். கல்முனையின் புகழ் பூத்த பெண்கள் பாடாசாலையின் அதிபர் நியமனத்திலும் இவ்வாறான குளறுபடியினால் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் நேர்முக பரிட்சையின் பிரகாரம் புதிய அதிபர் நியமனம் பெற்றாலும் அவரது விருப்பம் இல்லாமை காரணமாக, ஏற்கனவே பதில் கடமை ஆற்றியவரின் மூலமே பாடசாலையை நடாத்துவதற்கு முஸ்தீபு நிகழ்வதாக கல்வியலாளர்கள், பெற்றோர்கள் மத்தியில் கிசு கிசுவும் உலவுகிறது. அந்த கல்முனை மகளீர் பாடசாலையிலும் நிதி விவகாரங்களில் வெளிப்படை தன்மை இல்லை என்பதும் வெளிப்படை. கல்முனை மகளீர் பாடசாலைக்கு நேர்முக பரிட்சையின் அடிப்படையில் அடுத்த தகுதியானவருக்கு நியமனம் கிடைக்குமா என்பதே மாணவர்களினதும் பெற்றோர்களதும் ஆதங்கம்.

    Reply : 0       0

    முஹம்மது Sunday, 25 November 2012 12:48 AM

    நீங்கள் இராஜினாமா செய்தது மிகவும் நல்லதுதான்.உங்களுக்கெதிராக அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீங்கள் முந்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    முஹம்மது Sunday, 25 November 2012 10:51 AM

    ஆமாம் முஹம்மது உண்மையை சொன்னீர்கள். பதவியை மட்டும் பார்க்கக்கூடாது அவரின் பின்னணியையும் பார்க்க வேண்டும்.சிலரிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தால் இதுதான் நிலைமை.குருக்குக்கேல்விகளும் பித்னாவும்தான் மிஞ்சும்.இனியாவது தலைமைத்துவம் கவனமாக செயட்படட்டும்.இராஜினாமாவுக்குப் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.வளர்க தேசிய பாடசாலை.

    Reply : 0       0

    hassan Monday, 26 November 2012 06:07 AM

    உங்களைப்போன்றவர்கள் ராஜினாமா செய்தால் கள்வர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம்தான். தயவு செய்து உங்கள் ராஜினாமாவை வாபஸ் வாங்குன்கள். இல்லாவிட்டால் அந்த பாடசாலை திருடர்களின் ராஜ்யமாகவே மாறிவிடும்..............

    Reply : 0       0

    Iqbal Mohamed Monday, 26 November 2012 06:13 AM

    சிறந்த முடிவும் முறையான நடவடிக்கையும் தான். ஆனால் இது எங்களுடைய பாடசாலை என்பதால் இதனை நட்டத்தில் விட்டுவிடுவது நல்லதாகப் படவில்லை. ஆர்வம் உள்ளவர்களே இதனை கரை சேர்க்க வேண்டும் இல்லாவிட்டால் பாடசாலையை உறுஞ்சத்துடிப்பவர்களுக்கு ஸ்ட்ரோ கொடுத்தது போல் ஆகிவிடும்

    Reply : 0       0

    அலி அஹ்மத் Monday, 26 November 2012 08:40 AM

    சும்மா போங்க முஹம்மது, உங்களுக்கு 2வது கொம‌ன்டுக்கு பெயரை மாற்றவே தெரியல்ல. டொக்டர் எழுதியிருக்கிறது அப்படியே உண்மை. இல்லாட்டி அவரை நீங்க சும்மா விடுவீங்களா? மான நஷ்ட வழக்கு ஆயிரம் போட்டிருப்பீங்க.

    Reply : 0       0

    எஸ். ரீ. ஸம்ஸ் Monday, 26 November 2012 08:50 AM

    ஒரு தேசிய பாடசாலைக்கு இவரால் அதிபராயிருக்க நிச்சயமாய் முடியாது...... எத்தனையோ தகுதியுள்ளோர் எங்கெங்கோ சும்மா திரிகின்றனர்........... இதுவெல்லாம் யார் செய்த தவறுகள்?

    Reply : 0       0

    றிகபா...... Monday, 26 November 2012 06:06 PM

    சும்மா போங்க எஸ்.ரீ.பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுரீங்களோ..............பாவம் பள்ளிப்பிள்ளைகள்.... பாடவிதானமாவது ஒழுங்காகச் செல்கிறதா.. ஒரு நாளைக்கு 3 பாடமாவது...........

    Reply : 0       0

    நஜிமுத்தீன் Tuesday, 27 November 2012 01:24 AM

    இந்த பாடசாலை ரொம்ப மோசமான நிலையில் உள்ளது. கல்வியோ அடி பாதாளத்தில் உள்ளது. வரப்போகின்ற உயர்தரப்பரீட்சை பெறுபேறு இதற்கு சான்று பகரும். பொறுத்திருந்து பாருங்கள். அய்யோ....... தயவுசெய்து இந்த அதிபருடன் ஆறேழு ஆசிரியர்கள் உள்ளனர்.... அவர்களையும் சேர்த்து உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுங்கள்.............. உங்களுக்கு ரொம்ப புண்ணியம் உண்டு.

    Reply : 0       0

    நல்லவன் Tuesday, 27 November 2012 11:38 AM

    குடத்தில் விசத்தை அகற்றாமல் பாலை அகற்றினார்கள். இப்போ எப்படித்தான் பால் ஊற்றப்பட்டாலும் விசமாகித்தான் ஆகும். ஏனெனில் அங்கு விசம் இருக்கிறது. பாடசாலையை சிறப்பாய் மாற்ற விசத்தை முதலில் அகற்ற வேண்டும்.

    Reply : 0       0

    எஸ். ரீ. ஸம்ஸ் Tuesday, 27 November 2012 12:29 PM

    ஐயோ, ஐயோ........... பாடவிதானமாவது ஒழுங்காகச் செல்கிறதா என்பதைத்தான் நானும் கேட்கிறேன்.............. இதுக்கெல்லாம் எப்படி பதில் சொல்லப்போறீங்க?

    Reply : 0       0

    Iqbal Mohamed Wednesday, 28 November 2012 07:11 AM

    நீங்கள் சொல்வது மெத்தச்சரி, நல்லவன்! அலிபாபா போல் அதிபரும் நாற்பது திருடர்கள் போல ஏனைய திருடர்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலையை தீக்கிரையாக்குகின்றனர்.

    Reply : 0       0

    Vallavan Thursday, 29 November 2012 09:53 AM

    நல்லேவனே பாம்புக்குப்பேர் பாலாம்,விளக்குக்குப்பேர் விஷமாம்.நல்லாயிருக்குப்பா!நீங்கள் யாருமே வைத்தியரிடம் வைத்தியத்திற்கு போகவில்லையோ? தனது தொழிலையே சரியாக செய்ய முடிவதில்லையாம், அதட்கிடெயில் நிர்வாகமாம் , செயலாளராம். போதுமடா இருப்பவர்களை ஒழுங்காக செய்ய விடுங்கப்பா.

    Reply : 0       0

    Hamza Friday, 30 November 2012 01:32 AM

    மிஸ்டர் வல்லவன், அவரை ஊருக்கே தெரியும். அவர் சொந்த நலனை என்றும் பார்க்காதவர். எதிலுமே நுட்பமானவர். அவர் ஏன் உங்களிடம் சும்மா சண்டை பிடிக்க வேண்டும்? பாடசாலையின் நாற்றம் உங்கள் மூக்கைத்தொடவில்லையா? அவர் சொல்வதில் எந்தப்பிழையும் இருப்பதாய் எமக்குத்தெரியவில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X