2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கணவனை இழந்த குடும்பத் தலைவிகளுக்கு சுயதொழிலுக்கான கடன் உதவி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 26 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை, வீரமுனைப் பகுதியில் கணவனை இழந்த குடும்பத் தலைவிகளுக்கு சுயதொழில் நடவடிக்கைகளுக்கான கடன் உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கணவனை இழந்த 60 குடும்பத் தலைவிகளுக்கு சுமார் 16 இலட்சம் ரூபா கடன் உதவி வழங்கப்பட்டன.

வீரமுனை விதவைகள் புனர்வாழ்வு நலன்புரி ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கே இந்த கடன் உதவி வழங்கப்பட்டன. வேல்ட்விஷன் நிறுவனத்தின் சுழற்சி நிதியின் கீழ், இந்த கடன் உதவி வழங்கப்பட்டன.

வீரமுனை நியாப் பல்தேவைக் கட்டிடத்தில் வீரமுனை விதவைகள் புனர்வாழ்வு நலன்புரி ஒன்றியத்தின் தலைவி எம்.சுசீலா தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X