2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா

Super User   / 2012 நவம்பர் 26 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தேசிய வாசிப்பு மாதத்தினைச் சிறப்பிக்கும் முகமாக – அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் நடத்தும் 'விழுமியங்கள் விருந்தோம்பும் விருத்தி விழா' எனும் தலைப்பிலான மூன்று நாட்களைக் கொண்ட கலை, கலைசார, பண்பாட்டு, பாரம்பரிய விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பாமானது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பதில் தவிசாளர் எம்.ஏ. அன்சில் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப விழாவின் நிகழ்வுகள் அட்டாளைச்சேனை பிரதான வீதியருகில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பிற்பகல் 4.00 மணி முதல் நள்ளிரவு வரை இடம்பெற்றன.

மேற்படி விழாவின் ஆரம்ப நாள் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதன்போது, பாரம்பரிய விளையாட்டுக்களான கழிகம்பாட்டம், வாள்வீச்சு உள்ளிட்டவற்றுடன் வில்லுப் பாட்டு, நாட்டார் பாடல், கட்டுப் பாட்டு, ஹஸீதா, பேச்சு, கவிதை, விவாதம் ஆகிய நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன.

நிகழ்வுகளில் திறமைகளை வெளிக்காட்டியவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பின்களான எஸ்.எல். முனாஸ், ஐ.எல். முனாப், கலாபூஷண் ஆசுகவி அன்புடீன், கலாபூஷன் பாலமுனை பாறூக், ஆசிரிய ஆலோசகர் என். சம்சுடீன் உள்ளிட்டோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். இவ்விழா நாளையுடன் நிறைவடைகின்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X