2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 28 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எஸ்.மாறன்)


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு  வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், வேள்ட்விஷன் நிறுவனம் தலா ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 250,000 ரூபா நிதியுதவி வழங்கியதுடன், இந்தக் குடும்பங்களின் பங்களிப்புடன் மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இவ்வாறு வீடுகளை வழங்குவதற்காக 57 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இதில்  22 குடும்பங்களுக்கு நேற்றையதினம்  நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் திறப்புக்கள் கையளிக்கப்பட்டன.

தாண்டியடி செக்டா நிறுவன மண்டபத்தில் வேள்ட்விஷன் நிறுவனத்தின் பொத்துவில் பிராந்திய திட்ட இணைப்பாளர் தயாபரன் தலைமையில்  நடைபெற்ற இதற்கான ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் வி.நவீரதன், பிரதேச சமூகசேவை திணைக்கள உத்தியோகஸ்த்தர் எஸ்.நடேசன், செக்டா நிறுவனத் தலைவர் சதாசிவம், செக்டா நிறுவன முகாமையாளர் எஸ்.கோபிநாத், வேள்ட்விஷன் நிறுவன பிரதம கணக்காளர் எல்.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X