2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதைபொருட்களை வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


புதைபொருட்களை வைத்திருந்ததாக கூறப்படும் ஒருவரை அம்பாறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை அவரது வீட்டில் மறைத்துவைக்கப்பட்டிருந்த புதைபொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில்
திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சாகாமம் மொட்டைக்கல்மலை ஊரக்கை வயலிலிருந்தே இந்தப் பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவ்விடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள், தங்கத்திலான புத்தர் சிலை, புத்த இலச்சினை, வைரங்கள், முத்துக்கள், இரத்தினக்கற்கள் ஆகியனவே சந்தேக நபர் வீட்டில் மறைத்துவைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன் தென்னக்கோன் தெரிவித்தார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X