2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தொல்பொருட்கள் தொடர்பிலான விளக்கம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

சட்டவிரோதமாக தொல்பொருட்கள் அகழ்வில் ஈடுபடுதல், அதற்கான தண்டனை, தொல்பொருட்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தொல்பொருட்களினால் நாட்டுக் கிடைக்கும் நன்மை போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருக்கோவில் பிரதேச சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விளக்கமளிக்கப்பட்டது. 

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சாகாம கிராமத்தில்; சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட சிலர் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த சட்டவிரோத அகழ்வு நடவடிக்கை குறித்தும், மேற்படி பாதுகாப்புக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி யூ.ஏ.பத்மசிறி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித்ரோகண, அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்ணாயக்கா, திருக்கோவில் பிரதேச சிவில்பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், மதப் பெரியார்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வைத்தியசாலை உத்தியோத்தர்கள், கிராம உத்தியோத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.                                   

                                                      

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X