2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'ஜோதிடம் மற்றும் மணிமந்திர ஒளடத விடயம்' பயிற்சி பட்டறை

Kogilavani   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

பாரம்பரிய வைத்தியத்துறைக்கான தேசிய வைத்திய நிறுவனத்தினால் 'ஜோதிடம் மற்றும் மணிமந்திர ஒளடத விடயம் தொடர்பான'
பயிற்சிபட்டறை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை பிரதேசசெயலக மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேசத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியர்கள், பாரம்பரிய வைத்தியர்கள் மற்றும் ஜோதிடர்களுக்காக இந்த இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையிலும் நிர்வாக உத்தியோகத்தர் அபுல்ஹஸனின் நெறிப்படுத்தலிலும் இடம்பெறும் இப்பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக பாரம்பரிய வைத்தியத் துறைக்கான தேசிய வைத்திய நிறுவனத்தின் தமிழ் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் திருமதி விக்னவேணி செல்வநாதன், இலங்கை தேசிய பாரம்பரிய வைத்திய இணையத்தின் தலைவர் டாக்டர் செல்வமகேந்திரன், விரிவுரையாளர் டாக்டர் கேதகி குலபால ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X