2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் நில அதிர்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறையின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை காலை தொடர் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறையின் வதினகல, தேவலகந்த, தமண ஆகிய பகுதிகளிலேயே இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்றையதினம் காலை 9 மணியளவிலும் பின்னர் 10.15 மணியளவிலும் நில அதிர்வுடன் பாரிய சத்தங்களைக் கேட்டதாக அந்தப் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் நடத்திய ஆய்வில், அப்பாறையில் முன்னர் உண்டான நில அதிர்வு மனித நடவடிக்கைகளினால் உண்டானது என அறிவித்திருந்தது.

இன்று காலை உணரப்பட்ட இந்த நில அதிர்வு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல்  மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் என்.பி.விஜேயானந்த கூறினார். (வசந்த சந்திரபால)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X