2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

புவியியல் தகவல் தொழில்நுட்ப பயிற்சித் திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


புவியியல் தகவல் தொழில்நுட்ப பயிற்சித் திட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புவியியல்த்துறை திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான இப்பயிற்சித்திட்டம் எதிர்வரும் சனிக்கிழமைவரை நடைபெறும்

புவியியல்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான  கலாநிதி எம்.ஐ.எம்.கலீல் தலைமையில் நடைபெறுகின்ற இப்பயிற்சித்திட்டம் புவியியல்த்துறை தலைவர் எம்.எல்.பௌசுல் அமீரின் வழிகாட்டலிலும் விரிவுரையாளர்களான எம்.எச்.எம்.றினோஸ், ஐ.எல்.எம்.சாஹீர் ஆகியோரின் நெறிப்படுத்தலிலும் நடைபெறுகின்றது.

இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பயிலுனர்களும் இதில் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X