2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இடர் முகாமைத்துவக் கூட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

மழை மற்றும் வெள்ளம் காரணமாக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கண்டறிந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் இடர் முகாமைத்துவக் கூட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன மற்றும் பிரதேசத்திலுள்ள திணைக்கள, அரசாங்க நிறுவன அலுவலகங்களின் தலைவர்கள், அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழலில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்கள் பெறப்பட்டதோடு, வெள்ளம் தேங்கியுள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்பட்டது.

கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரி உத்தியோகத்தர்களும் இக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்தனர்.

                                                                                                                                                                                                                                                                                                         

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X