2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மக்களின் நன்மைக்காக எவருடனும் ஒத்துழைத்து செயற்படவுள்ளேன்: மாகாண சபை உறுப்பினர் ஆரிப்

Super User   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் அதிகாரத்தை வைத்துக்கொண்டு அழகு பார்க்காமல் மக்களின் நன்மைக்காக எவருடனும் ஒத்துழைத்து செயற்பட தயாராகவுள்ளேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

நிந்தவூர் பாத்திமா கிறீச் முன்பள்ளி பாடசாலையின் 39ஆவது வருடாந்த விழா அண்மையில் நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இவ்விழாவல் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார்.

"எமது பிரதேச பாடசாலைகளுக்கு திறமையான அதிபர்களை அரசியல் பாரபட்சம் பாராது தமக்கும் தமது கட்சிக்கும் விசுவாசமானவர் என்று கருதாது திறமைக்கு முன்னுரிமை வழங்கி  நியமிப்பதே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இதுவே பிரதேச கல்வியின் முன்னெற்றத்துக்கு ஒளி விளக்காக அமையும்" என மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X