2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் பிரச்சினை; துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு அமைச்சர் றிசாத் கடிதம்

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட  ஆழ்கடல் மீனவர்கள் தமது படகுகளை தரிப்பிடச் செய்வதில் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டி துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரியன்த விக்ரமவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கடற் கொந்தளிப்பு மற்றும் இயற்கை மாற்றங்கள் காரணமாக கரையோர மீனவர்கள் தமது படகுகளை நங்கூரமிடுவதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாலும் அதிகரித்த கடல் அலை காரணமாக படகுகள் கடலுடன் அடித்து செல்லப்படுவதும் மற்றும் சேதங்களுக்கும் உட்படுவதால் மீனவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் துறை முக அதிகார சபை தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிரமமான நிலையில் அம்பாறை மாவட்ட மீனவர்களை பாதுகாக்கும் வகையில் ஒலுவில் துறைமுகத்திற்குள் படகுகளை தரிப்பிடம் செய்வதற்கு தேவையான பணிப்புரைகளை ஒலுவில் துறைமுக அதிகாரிகளுக்கு வழங்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X